போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மாணவிகள் போதை பழக்கத்திற்கு அடிமையானது கவலை அளிக்கிறது – தமிழக முதல்வர் ஸ்டாலின்;

0
206

தமிழக முதல்வர் ஸ்டாலின், கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியின் பவள விழாவில் கலந்து கொண்டார்.இந்தக் கல்லூரி. பிளாஸ்டிக் ஒழிப்பு, சுய தொழில் வேலைவாய்ப்புக்கு வழிவகுத்தல், பல்வேறு நாட்டு நலத்திட்ட பணிகளை இந்த அரசு செவ்வனே செய்து வருகிறது. 75 ஆண்டு பவள விழாவைக் கொண்டாடும் வகையில் 75,000 பானைகளை செய்து கின்னஸ் சாதனை செய்துள்ள இந்த கல்லூரி, மண்பாண்டம் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வு சிறக்கச் செய்துள்ளது.இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இந்த வளர்ச்சியைக் இந்தியாவே திரும்பி பார்க்கிறது. தலைசிறந்த கல்லூரிகளை தமிழகம் பெற்றுள்ளது. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 31 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன.பள்ளிக் கல்வித் துறையாக இருந்தாலும், உயர்கல்வித்துறையாக இருந்தாலும் பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான கல்வியை பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது. போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களை மீட்க வேண்டும்.போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மாணவிகள் சிலரும் போதை பழக்கத்திற்கு அடிமையானது கவலை அளிக்கிறது. மாணவர்களுக்கு நல்ல கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்றுத்தர வேண்டும். அது அனைத்து கல்வி நிறுவனங்களின் கடமை. எனப் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here