வேலூர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.முக ஸ்டாலின் அவர்கள் வேலூர் மாவட்டம் , கோட்டைமைதானத்தில் நடை பெற்ற அரசு விழாவில் , ரூ .62.10 கோடி செலவிலான முடிவற்ற 17 பணிகளை திறந்து வைத்து , ரூ .32.89 கோடி மதிப்பீட்டிலான 50 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் . இந்த நிகழ்ச்சியில் , மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு . துரைமுருகன் , மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு , மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு . ஆர் . காந்தி . வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி .சுஜாதா ஆனந்தகுமார் . நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் , திரு . கதிர்ஆனந்த் , சட்டமன்ற உறுப்பினர்கள் , துணை மேயர் திரு . எம் . சுனில் குமார் , வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . பெ . குமாரவேல் பாண்டியன் , இ.ஆ.ப . , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் .
















