வேலூர்- பேராய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்-

0
488

வேலூர் பேராயத்தை நோக்கி படையெடுப்பு அரகொண்டா பாஸ்டரேட் பிசி கமிட்டி மற்றும் 18 கிராமத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் வேலூர் பேராயர் ரைட் ரெவரென்ட் ஷர்மா நித்தியானந்தம் அவர்களை சந்திக்க வேலூரில் உள்ள தலைமையகமான வேலூர் பேராய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

வேலூர் பேராயத்தின் விதிகளின்படி நடவாமல் விதிமீறல் செய்வதையும் காணிக்கை பணமாக சபையார் கொடுக்கும் பணத்தை கையாடல் செய்பவர்களை எதிர்த்து 18 கிராம மக்கள் வேலூர் பேராயத்தில் பேராயர் சர்மா நித்தியானந்தம் அவர்களை சந்தித்து முறையிட வந்துள்ளனர் பேராய அலுவலகத்தில் பேராயர் இல்லாத காரணத்தினால் அனகோண்டா பாஸ்டரேட் சபை மக்கள் அங்கிருந்த பொறுப்பாளர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர் எதுவாக இருந்தாலும் பேராயர் வந்த பிறகுதான் பேசிக் கொள்ள முடியும் என்று கூறியதால் முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு பேராயம் துணை போவது சரியா பேராயத்தின் விதிகளை மீறுவோரை பேராயம் கண்டித்து திருத்தாமல் அவர்களை பணியமர்த்த முயற்சிப்பது சரியல்ல என்பது போன்ற கருத்துக்களை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர் மேலும் முறைகேட்டில் ஈடுபடும் ஆலய காணிக்கை பணத்தை பேராயத்திற்கு முறையாக செலுத்தாமல் கையாடல் செய்யும் ராஜசேகர் என்கிற ஊழியக்கார்ருக்கு ஆயர் சாமுவேல் பாபு என்பவர் ஆதரவாக உள்ளார் மேலும் யகோவா மத்தியம் (மேல் மத்தியம்) எனப்படும் அந்த ஊரைச் சேர்ந்த ஆயர் சாமுவேல் பாபு என்பவரை அரகொண்டா அதாவது 19 கிராமங்களை உள்ளடக்கிய 19 சபைகளை உள்ளடக்கிய ஒரு பகுதியை அரகொண்டா பாஸ்டரேட் இந்த அரகொண்டா பாஸ்டரேட் சேர்மன் ஆக ஆயர் அருண்குமார் என்பவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பணியமர்த்தப்பட்டுள்ளார் பேராயத்தின் அங்கமாக இருக்கும் பாஸ்டரேட் பகுதிக்கு சேர்மன் ஆக ஆயர்களை பதவிக்கு அமர வைப்பது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை அவர்கள் அந்த பதவியில் அப்பகுதியில் பணியில் இருக்கலாம் பின்னர் அவர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் ஆனால் முறைகேட்டில் ஈடுபடுவதை ஆதரிக்காத சேர்மன் அருன்குமார் ஆயர் தவறுஇழைப்பவர்களுக்கு துணை போகாத அரகொண்டா பாஸ்டரேட் சேர்மன் சேர்மன் அருண்குமாரை 18 கிராமத்தில் உள்ள 18 சி.எஸ்.ஐ சபைகளை சேர்ந்த கிறிஸ்தவர்களின் ஒப்புதல் இல்லாமல் குப்பம் பாஸ்டரேட் பகுதிக்கு சேர்மன் ஆக பணியிடம் மாறுதல் வழங்கியுள்ளனர். இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் எங்களது ஊரும், சபைகளும் நல்வழியில் வளர பாடுபடும் பாஸ்டர் அருண் குமார் அவர்களே இங்கு மீண்டும் சேர்மனாக பணியைத் தொடர வேண்டும்,
ஆலய பணத்தை கையாடல் செய்யும் நபர்களை இங்கு பணியமர்த்த வேண்டாம், ஓர் கிராமத்தை சேர்ந்த ஒருசில நபர்களுக்காக பேராயர் நடவடிக்கை எடுப்பது சரியா? பதினெட்டு கிராமத்தைச்சேர்ந்த 18 சபையினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பாஸ்டர் அருன்குமார் பணிமாறுதலை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தி இன்று பிஷப் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் முறையாக நடவடிக்கை எடுக்க விட்டால் எங்கள் போராட்டம் தொடரும் என்று அரகொண்டா பாஸ்டரேட் அங்கத்தினர்கள் வலியுறுத்தி சென்றுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here