திருவொற்றியூர் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி -வீடுகள் மற்றும் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று ரயில்வே துறை அதிகாரிகள்: ரயில்வே அதிகாரிகள் காரை சிறை பிடித்த பெண்கள்:

0
381

திருவொற்றியூர் கிராமத் தெரு அண்ணாமலை நகர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

அதற்கு இடையூறாக உள்ள கடைகள் மற்றும் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று ரயில்வே துறை சார்பில் கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 15 நாட்களுக்குள் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள 117 வீடுகள் மற்றும் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று ரயில்வே துறை அதிகாரிகள் அண்ணாமலை கேட் அருகே வசிக்கும் இடத்துக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் கூறினர்.

இதையடுத்து அப்பகுதி பெண்கள் ரயில்வே அதிகாரிகள் வந்த காரை சிறை பிடித்தனர். உடனடியாக சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தாங்காடு போலீசார் தலைமையில் விரைந்து வந்து ரயில்வே அதிகாரிகள் காரை சிறை பிடித்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

அப்போது அப்பகுதியில் வசிப்பவர்கள் சுரங்கப்பாதை பாதை அமைய உள்ள இடத்தில் குறைந்த வீடுகளே உள்ளன. ஆனால் ரயில் கிடங்கு அமைப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் 117 குடும்பங்களை அப்புறப்படுத்தும் முடிவை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர்

பலமுறை அதிகாரிகள் பேசிப் பார்த்தும் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் வட சென்னை எம். பி வந்தால் தான் கலைந்து செல்வோம் என்று கூறி அதே இடத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து அதிகாரிகள் தாங்கள் வந்த 2 கார்களை விட்டு விட்டு நடந்து அவ்விடத்தை விட்டு வெளியேறினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here