அத்திப்பட்டு புதுநகர் வசித்து வருபவர் முனுசாமி செல்வி அவரது மூத்த மகன் தனுஷ் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான் .
இந்நிலையில் இன்று மதியம் குடும்பத்துடன் தாழம் குப்பம் கடற்கரைக்கு சென்று குடும்பமாக கடலில் குளித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது திடீர் ராட்சத அலையில் தனுஷ் சிக்கி திடீரென மாயமானார் அப்போது கூட வந்திருந்த குடும்பத்தினர்கள் கூச்சலிட்டனர் அங்கிருந்த மீனவர்கள் தேடிய நிலையில் கிடைக்காததால் உடனடியாக
காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தனுசை உடலை தேடி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..
















