சென்னை-3 000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்:

0
262

சென்னை ராயபுரம் அண்ணா பூங்கா அருகே உள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள இராயபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஐ டிரிம்ஸ் மூர்த்தி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து
திமுக முதன்முதலில் தொடங்கப்பட்ட இடமான சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்கா மைதானத்தில் திமுக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ ட்ரீம்ஸ் மூர்த்தி ஏற்பாட்டில் 3,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அரிசி, மளிகை பொருட்கள், புத்தாடை மற்றும் போர்வை உள்ளிட்ட 15 பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கினர். .

இந்த நிகழ்வின் போது வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர் டி சேகர், ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ. எபினேசர் உட்பட கட்சியை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here