அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம்:

0
462

எங்களுக்குள் (எடப்பாடி பழனிச்சாமி) எந்த விதமான பாகுபாடும் இல்லை. பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை தனித்தனியாக வழங்கி வருகிறோம். உங்களது பார்வையில் தான் தவறு உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். தி.நகர், அண்ணாநகர், எழும்பூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட எம்எல்ஏ தொகுதிக்குட்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வழங்கினார். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட படகுகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் மீனவப் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அதில் கனமழை, அதிக காற்று காரணமாக மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் பெரும் துயரத்தை அடைந்துள்ளார்கள். தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்தி அவர்களுக்கான இழப்பீடை தர வேண்டும் என பன்னீர் செல்வம் கூறினார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என மீண்டும் முதலமைச்சர் கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார்.
நானும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தனித்தனியாக நிவாரணம் வழங்குவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள என்ற கேள்விக்கு, எங்களுக்குள் எந்த விதமான பாகுபாடும் இல்லை. பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை தனித்தனியாக வழங்கி வருகிறோம். உங்களது பார்வையில் தான் தவறு உள்ளது எனவும் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here