ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வண்ணாரப்பேட்டையில் 1500 மரக்கன்றுகள் நடும் விழா:

0
247

ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வண்ணாரப்பேட்டையில் 1500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது,

சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இன்று வண்ணாரப்பேட்டை சரக துணை ஆணையாளர் முன்னிலையில் 1500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

சென்னை வண்ணாரப்பேட்டையை அடுத்த மூலக்கொத்தளம் பகுதியில் ரோட்டரி கிளப் சார்பாக ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவபிரசாத் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு மகிழ்ந்தார்

ரோட்டரி கிளப் சார்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பாக நகரங்களில் குறும் காடுகளை உருவாக்கும் திட்டத்திற்காக இன்று முதல் ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள பார்க் பகுதியில் 1500 மரக்கன்றுகளை நடுவதாகவும் இதேபோன்று தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு குறும் காடுகளை உருவாக்க போவதாகவும் ரோட்டரி மாவட்ட கிரீன் சேர்மன் சிவபாலா ராஜேந்திரன் தெரிவித்தார் மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நம்மால் இயன்ற மிகப் பெரும் உதவியாக மரக்கன்றுகளை நட்டு சுற்றுப்புற சூழலை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்

கம்யூனிட்டி சர்வீஸ் டைரக்டர்கள் முத்துசாமி ராஜசேகரன் மற்றும் ரோட்டரி கிளப் மெராக்கி, டிநகர், கோல்டன்சிட்டி, பினாக்கிள், அஸ்டிராஸ், அனெட்டிஸ், விஸ்டாஸ், போன்ற கிளப்புகள் இதுபோன்ற சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here