கடற்கரையில் அதிகாலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து பலி;

0
333

 

 

சென்னை எர்ணாவூர் பெரிய காசி கோவில் குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் (எ) கெண்டை ஆறுமுகம் தனது உறவினர் ராஜேந்திரன் வயது60 மற்றும் ஆறுமுகம் வயது 41ஆகியோர் சேர்ந்து எர்ணாவூர் பாரதியார் நகர் கடற்கரையில் உள்ள பைபர் படகில் ஏறி கடலில் மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடித்து விட்டு கரைக்கு படகில் திரும்பி வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில் ஆறுமுகம் கடலில் தவறி விழுந்து விட்டார். உடன் வந்த மீனவர்கள் அவரை மயங்கிய நிலையில் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து எண்ணூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here