*பாரம்பரிய மீனவமக்களின் the வாழ்வுரிமையை பறிக்கும் வணிக கப்பல் சட்டம்-1958 ம்,*
*திருத்தப்பட்ட இந்திய மீன்வள மசோதா-2021ஐ,*
*கைவிட கோரும்*
*மீனவ இயக்கங்கள்!*
இன்று(26.07.2021) பகல் 12.00 மணியளவில்,
இராயபுரத்தில்
மீனவர் இயக்க தலைவர்கள் பங்கேற்ற அவசர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் திருத்தப்பட்ட கடல் மீன்வள மசோதா குறித்த கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் தென்னிந்திய மீனவர் நலச் சங்க தலைவர் கு.பாரதி,
தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்க தலைவர் ஜெ.கோசுமணி,தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் கபடிபி.மாறன்,அகில இந்திய மீனவர் சங்க தேசிய செய்தி தொடர்பாளர் நாஞ்சில் ரவி,மீனவர் மக்கள் முன்னணி கட்சி தலைவர்-V.சங்கர் ஆகியோர் பங்கேற்று
திருத்தப்பட்ட இந்திய கடல் வள மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும்,
வணிக கப்பல் சட்டம் -1958 ஐ அறவே கைவிட இந்தக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.















