காசிமேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது;

0
343

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை அடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்

அப்பொழுது நாகூரான் தோட்டம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவலர்கள் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணையில் ஈடுபட்ட பொழுது காசிமேட்டில் உள்ள எம்ஜிஆர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் இருக்கும் பிரபு என்பது தெரியவந்தது

இதனையடுத்து அப்பகுதியில் விற்பனை செய்ய இருந்த சின்ன சின்ன பாக்கெட்டுகளாக வைத்திருந்த மொத்த அளவிலான 500 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினார்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை மத்திய புழல் சிறையில் அடைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here