மீன்பிடி தடை கால உதவிதொகை ரூபாய் 5000 த்தை ஆட்சிக்கு வந்த சில நாட்களிலே வழங்க உத்தரவு பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி;

0
869

*அகில இந்திய மீனவர் சங்கத்தின்*

*தேசிய செயல் தலைவரும் & தேசிய செய்தி தொடர்பாளருமான*

*டாக்டர் நாஞ்சில் P.ரவி*

*வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்…*

*மீன்வளத்துறை லஞ்சமும், ஊழல் மலிந்த துறையாகவும்,மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளின் மெத்தன போக்கால் தமிழக முழுவதும் ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என குற்றம்சாட்டினார்.*

*தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு மாநில அரசின் சார்பில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் 61நாட்கள் மீன்பிடி தடை கால உதவிதொகை ரூபாய் 5000 த்தை ஆட்சிக்கு வந்த சில நாட்களிலே வழங்க உத்தரவு பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி*

*அதே போன்று அக்டோபர், நவம்பர் மாதங்களில் மீன்பிடி குறைந்த காலம் என்றும் இந்த இரண்டு நிவாரண உதவி தொகையும் தமிழ்நாடு அரசு வழங்குகின்றது.*

*இந்த உதவி தொகை மீன்வளத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களில் குடும்பத்தில் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது.*

*அப்படி பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு உதவி தொகையை மாவட்ட வருவாய் துறை மூலம் சரிபார்த்து மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.*

*அப்படி கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் கூட்டுறவு சங்கத்தின் தலைவருக்கு லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் அந்த ஆண்டுக்கான உதவி தொகையை பெற முடியாது. இப்படி இன்னும் பல காரணங்களால் ஒரு ஆண்டுக்கு அந்த உறுப்பினர் உதவி தொகை பெற முடியாமல் போனால் மீண்டும் உதவி தொகை பெற வேண்டும் என்றால் அந்த பாதிக்கப்பட்ட உறுப்பினர்*

*மீண்டும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் இடம் பாதிக்கப்பட்டவர் புகார் மனு அளிப்பார் அந்த புகார் மனுவை மீன்வளத்துறை உதவி இயக்குனர் சரிபார்த்து பல மாதங்களுக்கு பிறகு பரிந்துரைத்து சம்மந்தபட்ட மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் மீன்துறை இணை இயக்குனர்,மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் மீன்வளத்துறை இயக்குனர் அவர்களிடம் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் மனு செல்லும் உயர் அதிகாரிகள் அவர்களின் விருப்பத்திற்கு பல மாதம் வைத்து விட்டு மீன்வளத்துறை அமைச்சர் அவர்களிடம் தெரியப்படுத்தி விட்டு பல மாதங்கள் அல்லது சில வருடங்கள் கடந்து அந்த பாதிக்கப்பட்டவனின் புகார் மனு*

*அந்த அந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் உள்ள வருவாய் துறைக்கு வரும் அங்கு அந்த பாதிக்கப்பட்டவனின் மனு கேட்பார் கேள்வியுற்று கடந்த 3 அல்லது 4 ஆண்டுகள் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் கிடப்பில் கிடக்கும். தற்போது வரைக்கும் கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட மனுக்கள் கிடப்பில் கிடக்கின்றது.*

*இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நிவாரணம் வழங்கும் போதும் மீன்வள துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர் கேட்கும் போது. உங்கள் மனு கடந்த வருடமே மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர்க்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உங்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை*

*எனவே புதிய மனு ஒன்று எழுதி கொடுத்துவிட்டு அதில் உங்கள் கூட்டுறவு சங்கத்தின் பெயரும் உங்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர் எண்ணும் எழுதி மனு கொடுத்து விட்டு செல்லுங்கள் நாங்கள் கம்பியூட்டரில் எற்றி வைக்கின்றோம். அடுத்த ஆண்டு அடுத்த திட்டம் வரும் போது வந்துவிடும் என்று சொல்லி அனுப்புவார்கள் .*

*ஏற்கனவே மனு கொடுத்து இருந்தேனே என்று கேட்டால், ஏற்கனவே இருந்த மீன்வள துறை உதவி இயக்குனர் மாற்றல் ஆகி போய்விட்டார்.அவர் கம்பியூட்டரில் ஏற்றவில்லை.எனக்கு முன்பு இருந்த மீன்துறை உதவி இயக்குனர்கள் வாங்கிய பல விண்ணப்பங்கள் கம்பியூட்டரில் ஏற்றாமல் அப்படி வைத்துவிட்டு போய்விட்டார்கள் எனவே அவரிடம் கொடுத்த தேதி இருக்கு இதை நான் தற்போது ஏற்ற முடியாது எனவே புதிய மனு கொடுங்கள் நான் உடனே ஏற்றி வரும் ஆண்டில் இருந்து உதவி கிடைக்க ஏற்பாடு செய்கின்றேன் என்று சொல்லி*

*இப்படி கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மீனவ மக்களுக்கு இரண்டு நிவாரணமும் கிடைக்காமல் அலைந்து திரிந்து மனம் வெதும்பி புலம்பி வருகின்றார்கள்.*

*ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவானி ஈட்டி தருவது அனைத்து மீனவர்களும் ஆனால் நிவாரணம் என்றால் குடும்பத்தில் ஒருவருக்கு என்பது என்ன அளவு கோல் என்று தெரியவில்லை. இப்படி ஏ.சி.அறையில் இருந்து மீனவருக்கு திட்டம் போட்ட அதிகாரிகளிடம் கேட்கின்றேன்.மனு கொடுக்க வருகின்றவர்கள் உங்கள் அலுவலகங்களில் உட்கார ஒரு சேர் கூட இல்லாத அவலநிலை எத்தனை அதிகாரிகளுக்கு தெரியும். எங்களுக்கு வேலை செய்யும் உங்களுக்கு ஏ.சி.உங்களுக்கு சம்பளம் தர ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி ஈட்டி தரும் மீனவ மக்களை இப்படி உதவி திட்டங்கள் பெற அலைக்கழிக்க செய்வதும் .எழுத படிக்க தெரியாத மீனவ மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உதவி தொகையை குறிப்பிட்ட நேரத்தில் ஆண்டு ஆண்டுக்கு வழங்குவதை வழங்காமல் சோம்பேறி தனமாக செயல்பட்ட திறமையற்ற லஞ்சம் , ஊழல் அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.*

*வேலை செய்யாமல் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமலும் உதவி தொகையை தடுத்த அதிகாரிகளுக்கு ஒரு மாத சம்பளம் அந்த அந்த அதிகரிகளுக்கு கிடைக்கவில்லை என்றால் அந்த அதிகாரியால் எப்படி அவரல் அவருடைய குடும்பத்தை எப்படி நடத்த முடியும் என்பதை எண்ணிபார்க்க வேண்டும்.*

*கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக மீனவருக்கு அரசு வழங்கும் உதவிதொகை கிடைக்காமல் இருந்தால் மீனவன் குடும்பம் என்ன பாடுபடும் என்பதை தவறு செய்யும் அதிகாரிகள் உணர வேண்டும்*

*தி.மு.க.அரசு மீது மீனவ மக்கள் மிகுந்த மரியாதையும், மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்.*

*எனவே கடந்த 3 ஆண்டுகளாக மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் நியாயமாக வழங்க வேண்டிய உதவி தொகை கிடைக்காமல் காத்து இருக்கும் மீனவர்களுக்கு நிவாரணம் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.*

*மேலும் தமிழக முழுவதும் உள்ள மீன்வளத்துறை அலுவலகங்கள் 1.மீன்பிடி தடை கால நிவாரணம், 2.புயல் கால சேமிப்பு நிவாரண திட்டம் , 3.மீன்பிடி குறைந்த கால நிவாரண உதவி தொகை என வெறும் 3 திட்டங்களுக்கு மட்டும் செயல்படும் அலுவலகமாக மட்டும் ஆண்டு முழுவதும் செயல்படுகின்றது. இதற்கு அலுவலகம் கட்ட பணம் , வாடகை கட்டிடத்தின் இயங்கினால் வாடகை பணம், மின்சாரம் கட்டணம் கட்ட பணம், அதிகாரிகளுக்கு பயணபடிக்கான பணம், உதிரிபாகங்கள் வாங்க பணம். மீன்வளத்துறை அரசு வண்டிகள் அதற்கு டீசல், மற்றும் 15 க்கு மேற்பட்ட அலுவலகங்கள், 300க்கு மேற்பட்ட அலுவலர்கள், 100 க்கு மேற்பட்ட உயர் அலுவலர்கள் என சுமார் 400 க்கு மேற்ப்பட்ட அலுவலர்கள் இருக்கின்றார்கள். இந்த நவீன உலகத்தில் ஆண்டுக்கு 3 திட்டங்கள் மட்டும் செயல்படுத்த இத்தனை அலுவலர்கள். என்பது கவனிக்கப்பட வேண்டிய விசயம்.*

*மீனவர்களுக்கு ஆண்டுக்கு ஒதுக்கப்பட கூடிய பட்ஜெட்டில் சுமார் 35 சதவீகிதம் இந்த அலுவலகம் கட்ட , கட்டிடத்தின் மெயின்டனஸ்க்கும், மின்சார செலவுக்கும், பயனபடிக்கும், போனஸ்க்கும், சம்பளம்,வண்டி வாங்க, டீசலுக்கு, உதிரிபாகம் வாங்க, இவை அனைத்துக்கும் போக தான் கடைகோடியில் இருக்கும் 80 லட்சம் மீனவருக்கு சுமார் 65 சதவீகிதம்,அதிலும் திட்டம் போட தெரியமால் ஒதிக்கிய நிதி சுமார் 20 சதவீகிதம் திரும்பி செல்கின்றது. அதிகாரிகள் என்று எங்களுக்கு வேலை செய்கின்றவர்கள் 400 நபர்களுக்கு 35 சதவீகிதம் என்பதை அரசு பரீசிலித்து வேலை செய்யாமல் மக்கள் வரி பணத்தை வீண் அடிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மிக கடுமையாக எடுக்க வேண்டும் . இது மக்கள் அரசு என்பதை காட்டும் அரசு என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும், வேலை செய்யாத திறமை அற்ற லஞ்சம், ஊழல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மீன்வளத்துறை மீனவர் நலத்துறையாக மாற்றிய அரசு இந்த உதவியையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். Uh

அகில இந்திய மீனவர் சங்கம்( NUF).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here