டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதேசமயம் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கருத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் உறுதியாக இருந்தனர். இதனால் அமமுகவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து அமமுக தலைமையிலான அணியில் இன்று தேமுதிக இணைந்துள்ளது. அமமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன், அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் ஆகியோர் கையெழுத்திட்டனர். தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.














