சென்னை திருவொற்றியூர் சண்முகாபுரம் தெருவை சேர்ந்த திலீப் என்பவர் அதை பகுதியில் செல்போன் கடை நடத்திவருகிறார்
இவர் கடந்த 9ஆம் தேதி தனது செல்போன் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த 36 செல்போன்கள் மர்ம நபர்கள் கொள்ளை அடித்ததாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் இந்நிலையில் செல்போன் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் செல்போன் திருட்டு வழக்கில் தொடர்புடைய கொருக்குப்பேட்டை சேர்ந்த பல்லு பாஸ்கர் (22), கௌரிசங்கர், அரவிந்தன், கார்த்திக் ஆகிய 4 பேரை கைது கைது செய்து அவர்களிடமிருந்து 36 செல்போன்களை பறிமுதல் செய்தனர் மேலும் அவர்களை விசாரித்ததில் திருவொற்றியூர் ஆர்கே நகர் போன்ற பகுதிகளில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது















