பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க டிச.26 முதல் 30-ந்தேதி வரை டோக்கன்; முதலமைச்சர்

0
300

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பாக அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையெட்டி பொங்கல் பரிசாக தலா ரூ.2,500 வழங்கும் திட்டத்தை நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் ‘‘2500 ரூபாய் பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசு தொகுப்பு ஆகியவற்றை வழங்குவதற்கான டோக்கனை வருகிற 26-ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்.

அனைவருக்கும் ஜனவரி 13-ந்தேதிக்குள் பொங்கல் பரிசு மற்றும் பரிசுத் தொகுப்பை வழங்கி முடித்திட வேண்டும். ஒருநாளை முற்பகல் 100 பேர், பிற்பகல் 100 பேர் என பிரித்து டோக்கன் வழங்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் ரொக்க பணத்தை உறையில் வைத்து வழங்கக்கூடாது’’ எனத் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here