காசிமேடு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டில் பதுங்கியிருந்த 3 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காசிமேடு காசிபுரம் A.பிளாக்கில் சந்தேகத்திற்கிடமாக ரவுடிகள் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அதிரடியாக வீட்டினுள் புகுந்து சோதனை மேற்கொண்டதில் மூன்று பேர் கத்திகளுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது இதனையடுத்து இரண்டு பட்டாக்கத்தி களையும் பறிமுதல் செய்து மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் காசிமேடு பகுதியை சேர்ந்த தேச கண்ணு வருண் அஜித் என தெரியவந்தது
விசாரணையில் தேச கண்ணு மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது வருணின் அண்ணன் பிரபல ரவுடி லோகு தற்போது சிறையில் உள்ளதும் தெரியவந்தது இந்நிலையில் மூன்று பேரும் பட்டாக்கத்தி களுடன் கைது செய்திருப்பது வேறு ஏதேனும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டி பதுங்கி இருந்தார்களா அல்லது செய்துவிட்டு பதுங்கியிருக்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
காசிமேடு பகுதியில் பகுதிகளுடன் 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
















