வங்கக்கடலில் வரும் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
467

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை மற்றும் புயலால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. புயல் கரையை கடந்துள்ளபோதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வரும் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலையானது தென் தமிழகத்திற்கு மேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here