திருவொற்றியூரில் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் அவர்களுக்கு புகழஞ்சலி.;

0
369

திருவள்ளூர் மத்திய மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கமிட்டி பிரிவின் சார்பாக திருவொற்றியூரில் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாருக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். முன்னதாக எச்.வசந்தகுமாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் வர்த்தகப் பிரிவு அணி தலைவர் வெ. உமாபதி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர்T.S.தேசியமணி
கீர்த்தி, மோகன், உமாபதி ஆறுமுகம், ரமேஷ் ,சிவசங்கரன், முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மகேந்திரன் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். வர்த்தக பிரிவின் மாநிலச் செயல் தலைவர் எம்.ஜி.ராமசாமி மற்றும் மணலி தங்கம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த விஜய் வசந்த் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்காக பாடுபட்டவர் என்றும் அவரை நினைவூட்டும் விதமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று திருவொற்றியூரில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது என்றும்
பாஜகவின் யாத்திரை என்பது வருகின்ற தேர்தலுக்காக அரசியல் செய்கின்றனர் என்றும் வருகின்ற கூட்டணி திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் வெற்றிக் கூட்டணியாக அமையும் என்றும் 2021ல் ஸ்டாலின் முதல்வராக அமருவார் என்றும் கூறினார். எங்களது கூட்டணியில் யார் வந்தாலும் இனைத்துக் கொள்வோம் என்றும் விஜய் பற்றிய கருத்திற்கு அது அவர்களது குடும்பத்தில் உள்ள உட்பட்ட பிரச்சினை என்றும் குடும்பத்தினரோடு கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here