சுடுதண்ணீரில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,

0
474

புது வண்ணாரப்பேட்டையில் குளிப்பதற்காக வைத்த சுடுதண்ணீரில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் மெயின் தெருவில் வசிக்கும் 20 வயது கொண்ட அனிதா என்பவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார் இவரது தந்தை கள்ளக்குறிச்சியில் தங்கி கேஸ் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார் அனிதா இன்று காலையில் குளிப்பதற்காக ஹீட்டர் மூலமாக தண்ணீரை சூடாக்கி உள்ளார் ஹீட்டரின் மின்கசிவு காரணமாக தண்ணீர் முழுவதும் மின்சாரம் பாய்ந்திருந்தது தெரியாமல் தண்ணீர் சூடாகி விட்டதா என்று தண்ணீரில் கை வைத்து பார்க்கும் பொழுது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டார் அந்நேரத்தில் கடைக்கு டீ வாங்குவதற்காக சென்றிருந்த அவரது தாயார் திரும்பி வந்து பார்க்கும் பொழுது உடல் அசைவற்ற நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் மின்சாரத்தை துண்டித்துவிட்டு அனிதாவை ஆட்டோவில் தூக்கிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்
இச்சம்பவம் புது வண்ணாரப்பேட்டையில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது
வருகின்ற மாதங்கள் குளிர்காலம் என்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் தண்ணீரை ஹீட்டர் மூலமாக சூடாக்குவதனால் இச்சம்பவத்தை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here