சென்னை வண்ணாரப்பேட்டையில் மர்மமான முறையில் வெட்டியான் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மூலகொத்தளம் இடுகாட்டில் வெட்டியானாக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இவர் வீட்டை விட்டு வெளியே வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இறந்த நிலையில் இருந்துள்ளார் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்
சமீபகாலமாக கடன் பிரச்சினையால் கடன் கொடுத்தவர்கள் தொல்லை செய்து வந்ததால் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்துவிட்டார்கள் என ஜெகனின் சகோதரர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சகோதரர் சாவில் மர்மம் இருப்பதாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்















