வேளாண் சட்டத்தை கண்டித்தும், ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தி.மு.க. கூட்டணிகட்சிகள் கண்டன ஆர்பாட்டம்;

0
326

விவசாயபெருமக்களை பெரிதும் பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தை கண்டித்தும், ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணிகட்சிகள் வேலூர் அண்ணாகலையரங்கம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர், இந்த ஆர்பாட்டத்தை தி.மு.கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையேற்று நடத்தினார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வேளாண் சட்டத்தை இயற்றிய
மோடி அரசாங்கத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும், கண்டன உரை நிகழ்த்திய தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தேர்தலை சந்திக்க தி.மு.க தயாராக உள்ளது என்று தனது பேட்டியில் குறிப்பிட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர், கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here