கொரோனா நோய் தொற்றால் வாழ்வாதாரம் இழந்த திருநங்கைகளுக்கு திருநங்கை அப்சரா ரெட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்;

0
356

சென்னை காசிமேட்டில் திருநங்கையான முத்தம்மாள் என்பவருக்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி சுய தொழில் புரிவதற்கான இட்லி விற்பனை செய்யும் தள்ளுவண்டி மற்றும் 80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வழங்கினார் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் திருநங்கைகள் மிகவும் பாதிக்கப்பட்டதாக அறிந்த அப்சரா ரெட்டி அவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு காசிமேடு காசிபுரம் பி பிளாக் பகுதியைச் சார்ந்த திருநங்கை முத்தம்மாள் என்பவருக்கு இட்லி விற்பனை செய்து முன்னேறுவதற்காக அவருக்கு தேவையான இட்லி விற்பனை செய்யும் தள்ளுவண்டி பாத்திரங்கள் கேஸ் அடுப்பு குளிர்சாதன பெட்டி உட்பட 80 ஆயிரம் மதிப்புள்ள அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்கினார் மேலும் இதே போன்று தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பாதிக்கப்பட்ட திருநங்கைகள் 100 பேருக்கு அவரவருக்கு தேவையான தொழில் சம்பந்தப்பட்ட பொருட்களை வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார் இந்நேரத்தில் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்வதைவிட வாழ்வில் முன்னேறுவதற்காக அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதில் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார் இதில் அப்சரா ரெட்டி என்பவர் திருநங்கையாக இருந்து காங்கிரஸில் தேசிய அளவில் பொறுப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தகுந்தது அதுமட்டுமல்லாமல் சமூக சேவகர் ஆகவும் பத்திரிகையாளராகவும் சேவை புரியும் அப்சரா ரெட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது அவருடன் ஸ்ரேயா மருத்துவர் கமலா ஜாய் ஆலுக்காஸ் ஜெரியா ஜெயின் உயர்நீதிமன்ற முதன்மை வழக்கறிஞர் லெனின் மற்றும் திருநங்கைகள் அமைப்புகள் சார்பாக மலேக்கா தனம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here