பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் இன்று நேரில் சென்று ஆய்வு.

0
8

சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடைபெற்று வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள், விளையாட்டு வீரர்களுக்கான விடுதி உணவு முறை, தங்குமிட வசதிகள் மற்றும் பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார். இந்த ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தான் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் என்பதைத் தாண்டி, இதே நேரு விளையாட்டு அரங்கில் ஒரு காலத்தில் தங்கிப் பயின்ற விடுதி மாணவனும், ஒரு சாதாரண விளையாட்டு வீரரும் ஆவேன் என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், இது தனது சொந்த வீடு போன்றது என்பதால் இங்குள்ள வீரர்களின் தேவைகளைத் தான் நன்கு அறிவேன் என்றும், விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளுக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளும், தரமான உணவும் தங்குதடையின்றி கிடைப்பதை அரசு முழுமையாக உறுதி செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார். நிருபர்- RG ஆதிஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here