







மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வீட்டு குடியுரிமை பட்டாவை வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி இன்று13.5.2025 தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் திருக்கரங்களால் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எண்ணூர் கத்திவாக்கம் வருவாய் கிராமத்தைச் சேர்ந்த 2000 பொதுமக்களுக்கு வீட்டு குடியுரிமை பட்டா திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் பள்ளியில் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு பி.கே. சேகர்பாபு அவர்களும், சென்னை வடகிழக்கு மாவட்டம் கழக செயலாளர் திரு மாதாவரம் எஸ்_சுதர்சனம்MLA அவர்களும் , வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.திரு கலாநிதி_வீராசாமி MP அவர்களும், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்களும் மற்றும் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் அவர்களும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே_பி_பி.சங்கர் MLA அவர்களும்.RK நகர் சட்டமன்ற உறுப்பினர் JJ. எபினேசர் அவர்களும் திருவொற்றியூர் 1வது மண்டல குழுத் தலைவர் திரு தி_மு_தனியரசு MC அவர்களும் திருவொற்றியூர் மேற்கு பகுதி கழக செயலாளர் திரு. வை_மா_அருள்தாசன் Bsc BL அவர்களும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் அனைத்து வட்ட செயலாளர்களும் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் உடன் கலந்து கொண்டனர்.














