கேமரா உபகரணங்கள் உள்ளங்கையில்:

0
11

நம் கலைஞர்களுக்கு வீடியோ, போட்டோ எக்ஸ்போ ஒரு வரப்பிரசாதம் என்றே கூறுவேன். புகைப்பட கலை 60 வருடத்திற்கு முன் வசதி படைத்தவர்கள் மட்டுமே இத்தொழில் செய்து வந்தனர் அவர்களிடம் நம்மவர்கள் உதவியாளராக சேர்ந்து தொழில் நுட்பம் கற்று தேர்ந்து அவர்களின் பழைய கேமராவை பெற்று தொழில் செய்து வந்தனர். பிறகு படிப்படியாக புகைப்பட கலைஞர்கள் பெருக ஆரம்பித்தனர். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை இல்லை ஒத்துக்கொள் என்கிறது பழமொழி. ஒருகாலத்தில் கேமரா வாங்க வேண்டும் என்றால் வெளிநாடு சென்று வாங்க வேண்டும். அத்தகைய தொழில் நுட்ப கருவிகள் எளிதில் கிடைக்காது. ஆனால் இன்று நாம் இருக்கும் இடத்தில் உலகளவில் அறிமுகம் செய்யும் கேமரா மற்றும் கேமரா உபகரணங்கள் உள்ளங்கையில். அவையாவும் இந்த தலைமுறை கொண்டாட வேண்டிய ஒன்று. வருடத்திற்கு இரண்டு எக்ஸ்போ நடைபெறுகிறது. இந்த எக்ஸ்போ கற்றுக்கொள்ள நிறைய பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, அனைத்து மாடல் கேமரா சர்வீஸ் சென்டரும் உள்ளது. புது புதுப்புது CAMERA MODEL S / UPDATE / UPGEARS / SPARE PARTS / LIGHT EQUIPMENT , CAMERA BAGS இன்னும் நிறைய எல்லாம் ஒரே இடத்தில் சிறுக சிறுக சேர்த்த பணம் இன்று நம் தொழில் உயர்வுக்கும் வாழ்வுக்கும் அடித்தளமாகிறது. ஆகவே நாம் முதல் நாள் பார்வையிட வேண்டியது கண் காட்சியில் உள்ள புகைப்பட கடைகள் என்னென்ன என்பதை கண்டறிய வேண்டும் இரண்டாம் நாள் எந்த பொருட்கள் வாங்கலாம் எது அவசிய தேவை என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். மூன்றாம் நாள் நம் பட்ஜெட்டில் பணம் கொடுத்து வாங்கி விட வேண்டும்.ஒவ்வொரு புகைப்பட கலைஞனும் மூன்று நாட்களும் கண்காட்சி காணவேண்டும். அப்பொழுதான் ஒரு தெளிவு கிடைக்கும்.இது சுற்றி பார்த்துவிட்டு செல்ல வெறும் பொழுபோக்காக கருத கூடாது. நம் தொழிலை வளர்த்துக்கொள்ள திறன் சார்ந்த சந்தைப்படுத்தல் இடமாக எண்ண வேண்டும் . வாருங்கள்.வளம் பெறுங்கள்.”செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்” வாழ்க புகைப்படகலை, ‌வளர்க புகைப்பட கலைஞன். “நம் வாழ்வும் நம் வளமும் மங்காத புகைப்பட கலை என்று சங்கே முழங்கு”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here