10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய கோரி வடசென்னையில் ஆர்ப்பாட்டம்;

0
360

செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் 7 தமிழர்களையும் எந்த ஒரு பாரபட்சமின்றி உடனடியாக விடுதலை செய்ய கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வடசென்னையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் வடசென்னை மாவட்ட தலைவர் பக்கீர் முகமது தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருகின்ற செப்டம்பர் 10.09.2020 அன்று, பேரறிஞர் அண்ணா 112ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நன்னடத்தையின் அடிப்படையில் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்து கொண்டாடி வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஒவ்வொரு முறையும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யாமல் புறக்கணிப்பது முஸ்லிம் சமூகத் திடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே போன்று 7 தமிழர்களை விடுதலை விவகாரத்திலும் தமிழக மக்களிடத்தில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசின் இந்த பாரபட்சமான செயல் பாட்டை உடனடியாக நிறுத்திக் கொண்டு தமிழக அரசு வருகின்ற செப்டம்பர் 15.09.2020 நாளன்று 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் அதேபோல் 7 தமிழர்களையும் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி பாரபட்சமும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசுக்கு கோரிக்கையை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழகம் தழுவிய மாவட்ட ரீதியிலான போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வடசென்னை மாவட்ட சார்பாக 200க்கும் மேற்பட்டோர் ஆண்கள் பெண்கள் உட்பட தமிழக அரசை
வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here