விதிமுறைகளை பின்பற்றாததால் கரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை ஐஐடி வளாகம் -சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

0
406

*மாஸ் அணியாத பொதுமக்களுக்கு சென்னை ஐஐடி சம்பவம் ஒரு பாடம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்*

சென்னை தண்டையார்பேட்டையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்

அப்போது பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை ஐஐடியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது

ஊரிய விதிமுறைகளை பின்பற்றாததால் கரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை ஐஐடி வளாகம் மாறியுள்ளது

நேற்றுவரை 104 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 79 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்தால் மாணவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்

மாஸ்க் அணியாத மக்களுக்கு சென்னை ஐஐடி விவகாரம் ஒரு பாடம்

தொற்று பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்

பின்னர் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை மாநகராட்சி பொருத்தவரையில் இன்னும் இரண்டு நாட்களில் கரோனா பரிசோதனை எண்ணிக்கையை 25 லட்சத்தை கடக்கப் போகிறோம்

சென்னையில் மூன்றில் ஒருவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது

கரோனா தடுப்பூசி மருந்து எல்லோருக்கும் கிடைக்க மூன்று மாத காலம் வரை ஆகும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்

பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் இதை குறைந்தது மூன்று மாதங்களுக்கு கடைபிடிக்க வேண்டுமென்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here