மதுபான கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு;

0
296

22.11.2020 மதுபான கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புதுவண்ணாரப்பேட்டை அருகே கடை எண். 30, 37 மதுபானக் கடையை உடனடியாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, புதுவண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா தெரு குடியிருப்போர் பொதுநல சங்கம் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும் அங்குள்ள மதுபான கடையை உடனடியாக மூடக்கோரி கோஷங்கள் எழுப்பிபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில்; இந்த மதுபான கடை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, பேருந்து நிறுத்தம், மார்கெட் மருத்துவமனை, அரசு நூலகம் அரசு கல்லூரி, என இங்கு உள்ளது. வீட்டிலிருந்து கடைக்கு கடந்து செல்லும் பெண்கள் மீது குடிமகன்கள் குடித்து விட்டு பெண்கள் மேல் விழுவதும் அதேபோல் வரும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவது குடித்துவிட்டு ரோட்டிலேயே அரை நிர்வாணமாக இருப்பதால் அவ்வழியாக கடைக்கு செல்லும் பெண்கள் வேலைக்கு செல்பவர்கள் கல்லூரி மாணவிகள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். அதேபோல் இந்த மதுபான கடையை மூடக்கோரி தாங்கள் அனைவரும் இணைந்து கையெழுத்து பெற்று சென்னை மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலர், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்தோம். ஆனால் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே ஆத்திரமடைந்த தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். பேட்டி;1. பானுமதி 2.தமிழ்ச்செல்வி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here