போக்குவரத்து போலீசார் சோதனையில்
டூ வீலரில் கடத்திய குட்கா சிக்கியது
3.5 லட்சம் பணமும்u பறிமுதல்சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் போக்கு வரத்து போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில், போக்குவரத்து போலீசார் லோன் ஸ்கொயர் பகுதியில் வாகன சோதனையில், ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது அப்பகுதியா வந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரை கையை அசைத்து நிறுத்தும்படி போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர் ஆனால் அவர் போலீசாரை மீறி வாகனத்தை ஓட்டி சென்றார் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை துரத்தி பிடித்துனர் போலீசார் அவரிடம் நடத்த விசாரணை முன்னும் பின்னுமாக பேசியதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து போலீசார் அவர் வந்த வாகனத்தின் சோதனை இட்டனர் அப்பொழுது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 குட்கா பாக்கெட்டுக்கு கூலிப் பாக்குகள் மற்றும் கணக்கில் வராத 3.5 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது அவரை பிடித்த போக்குவரத்து போலீசார் அப்பகுதிக்கு உட்பட்ட எஸ்பிளனேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் அங்கு வந்த சட்ட ஒழுங்கு பிரிவு போலீசார் அவரை கைது செய்து அவர் கடத்தி வரப்பட்ட குட்கா மற்றும் கூலி பாக்குகள் 3.5 லட்சம் பணம் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் அதில் முதல் கட்ட விசாரணையில் அவர் பெயர் துரை என்பது தெரிய வந்து அவர் எங்கிருந்து போதை பொருளை வாங்கி வந்துள்ளார் என்பது எங்கு விற்பனை செய்ய இருந்தார் என்பதையும் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்














