கர்நாடக மாநிலத்தில் இருந்து திருமண கோஷ்டியினர் ஒரு பேருந்தில் கேரள மாநிலத்திற்கு இன்று வந்தனர். இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் காசர்கோடு மாவட்டம் ராஜபுரம் பகுதியில் வந்தபோது, பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் சாலையை விட்டு விலகி, பள்ளத்தில் பாய்ந்த பேருந்து, ஒரு வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி உள்ளார்
















