மோடியை எதிர்க்கக்கூடிய துணிச்சல் உள்ள ஒரே தலைவர் மு. க.ஸ்டாலின் ஆ ராசா எம்பி பேச்சு .பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை வட கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவொற்றியூர் பெரியார் நகரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் தி.மு. தனியரசு, கே.பி. சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆ. ராசா எம்.பி கலந்து கொண்டு கட்சி தொண்டர்களுடன் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசை கண்டித்து கோஷமிட்டார். அப்போது விலை உயர்வால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் பதாகைகளை கையில் ஏந்தி நின்றிருந்தனர். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து ஆ. ராசா எம்.பி.பேசியதாவது, காங்கிரஸ் திமுக ஆட்சியின் போது பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருந்தது. ஆனால் இந்த பாஜக மற்றும் அதிமுக ஆட்சியில் பெட்ரோல் விலை கடுமையாக அதிகரித்துள்ளது
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பக்கத்து நாடுகளான ஸ்ரீலங்கா பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது ஆனால் இந்தியாவில் மட்டும் தான் மற்ற நாடுகளை விட மிக அதிகமான விலையில் விற்கப்படுகிறது. இவ்வாறு பொதுமக்களின் மீது அக்கறை கொள்ளாத வர்களாக மோடியும் அவருக்கு துணை நிற்கும் எடப்பாடியும் உள்ளனர். ஜிஎஸ்டி வரியால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர் .நீட் தேர்வால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா இருந்தவரை கூட இந்த நீட் தேர்வு ஜிஎஸ்டி வரவில்லை மோடியை துணிவோடு எதிர்த்தார். ஜெயலலிதா இருந்த வரையில் தமிழகத்தில் நீட் வரவில்லை ஜிஎஸ்டி வரவில்லை மாநில உரிமைகள் பறி போக வில்லை. ஆனால் ஜெயலலிதாவின் பெயரை கூறிக்கொண்டிருக்கும் மோடி மத்திய அரசிடமிருந்து எந்த உரிமைகளும் பெற்று தர யோக்கியதை இல்லாத தங்களது ஊழலை மறைப்பதற்காக இன்னும் ஏன் அமிர்ஷா வந்தால் அவர் காலை தொட்டு கும்பிடும் அளவிற்கு அதைவிட சொல்லப்போனால் அமித்ஷாவின் உதவியாளர் தமிழகத்துக்கு வந்தால் கூட இங்கே இருக்கக்கூடிய அனைத்து அதிமுக அமைச்சர்களும் அவரது காலைக் கழுவார்கள் போல உள்ளது இந்த அளவிற்கு தமிழகத்தின் நிலை மோசமாக உள்ளது அதனால் தான் கூறுகிறேன் தற்போது நடைபெற்றுக் கொண்டு இருப்பது மத்திய மாநில அரசு மக்களுக்கு விரோதமான ஆட்சி. இந்த டீசல் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் அனைத்து அறிஞர்களும் சொல்லுவது போல் மோடியின் மோசமான பொருளாதாரக் கொள்கைதான. இவ்வாறு மோடியின் உடைய மக்கள் விரோத ஆட்சியை எதிர்ப்பதற்கு பத்திரிகைகளும் அரசியல் தலைவர்களும் பயப்படுகின்றனர் .அவரை எதிர்த்தால் அவர்கள் வீட்டுக்கு ரெய்டு போவதை பார்க்க முடிகிறது. இப்படி பயமுறுத்தியே மம்தா பேனர்ஜி பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலிருந்த அமைச்சர்களை பாஜக இழுத்து விட்டது. இப்படி இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் மோடி எதிர்ப்பதற்கு பயப்படுகின்றனர் ஆனால் ஒருவர் மட்டுமே தமிழ்நாட்டில் துணிச்சலோடு எதிர்க்கிறார் அவர் யார் என்றால் தலைவர் மு க ஸ்டாலின், கலைஞருக்கு பிறகு பொறுப்பேற்றுக்கொண்ட முகஸ்டாலின் போட்ட முதல் முழக்கமே இந்தியா முழுவதும் காவி சாயம் பூச இருக்கின்ற மோடிக்கு சரியான பாடம் புகட்டுவோம். ஆரிய திராவிட போர் இந்தியா முழுவதும் தொடர்ந்து நீடிக்கும் அதை நாங்கள் முன்னின்று நடத்துவோம் என்றார். இவ்வாறு துணிச்சலாக பேசக்கூடிய தலைவர் மு க ஸ்டாலினை தவிர இந்தியாவில் வேறு யாருமில்லை. எனவே இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழகத்தின் முதலமைச்சராக மட்டுமல்ல வருங்காலத்தில் பிரதமரை தீர்மானிக்க கூடிய ஒரு தலைவராக இருப்பார். எனவே டீசல் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்த போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு எதிரான இந்த மக்கள் விரோத ஆட்சி செய்யும் பாஜக அரசையும் எடப்பாடி அதிமுக அரசையும் ஒழித்துக்கட்டும் வகையில் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் பின்னால் அணிவகுப்போம் இவ்வாறு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில மீனவர் அணி செயலாளர் பத்மநாபன், நிர்வாகிகள் கண்ணதாசன், ராமநாதன், க.வி கணேசன் குறிஞ்சி கணேசன்,முருகேசன், ஆதி குருசாமி ,திரிசங்கு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
















