பள்ளிப்பட்டு பேரூராட்சியில் காய்கறி வாகன விற்பனை திட்டம்..அமோக வரவேற்பு!

0
295

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவுக்கிணங்க,மாவட்ட கழக செயலாளர் M.பூபதியின் ஆணைக்கிணங்க திருத்தணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் S.சந்திரன் அவர்களின் ஆலோசனைப்படி பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமியின் வழிகாட்டுதலுடன் வாகனத்தில் பொதுமக்களுக்கு காய்கறி விற்பனை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.அரசு காய்கறி விற்பனையில் பள்ளிப்பட்டு பேரூராட்சி திமுக நகர செயலாளர் ஜோதிகுமார் உடனிருந்து கலந்து கொண்டு வழி அனுப்பி வைத்தார்.தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோணா பரவலால் பல இன்னல்களுக்கு இடையே வேறு வழி இன்றி கடினமான பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.சிறு காய்கறி வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தும் கொரோணா பரவுவதற்க்கு அதிகபட்ச வாய்ப்பு காய்கறி கடைகளில் உள்ளது என ஆலோசனைக்குழு வழங்கிய ஆலோசனைகளின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று அனைத்து பொதுமக்களும் பேரூராட்சி நிர்வாகத்திற்க்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயம் தவறாமல் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என நகர செயலாளர் ஜோதிகுமார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட திட்டம் கொரோணாவை கட்டுப்படுத்த உதவும் என்பதே சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது. நிருபர்
K.S.திலீப்-பள்ளிப்பட்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here