தண்டையார் பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் தனியார் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள 60 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கோவிட் மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதய நிதி ஸ்டாலின் ஆகியோர் திறந்து வைத்தனர். உடன் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கோவிட் மையம் ஸ்டென்லி அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டில் செயல்பட உள்ளது. நாள் ஒன்றுக்கு 6 மருத்துவர்கள், 20 செவிலியர்கள் இந்த கோவிட் மையத்தில் பணியாற்ற உள்ளனர். ஒரு மருத்துவ படுக்கையில் ஒரு ஆக்சிஜன் செறிவூட்டிகள், மின் விசிறி, நாடி துடிப்பு கருவிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் மேலும் டி எஸ் எஸ் நாடார்கள் மேல்நிலைப்பள்ளி முருகதனுஷ்கொடி மேல்நிலைப்பள்ளி கே சி எஸ் கமிட்டி ஆகியோர்கள் ஒன்றிணைந்து வழங்கிய ஆம்புலன்ஸ் செய்யும் கொடியசைத்து துவக்கி வைத்தார் இதற்கான ஏற்பாடுகளை செய்த ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசருக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றிகளை தெரிவித்தார்
விழாவில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களால் ஆன உதவி தொகையை அந்த பகுதி மக்கள் உதயநிதியிடம் வழங்கினர். இதில் முதியவர்கள் தங்களது பென்சன் தொகையையும் மாணவிகள் தங்களது சேமிப்பு தொகையையும் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியது குறிப்பிடத்தக்கது
















