தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம்;

0
311

தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அரி யமங்கலம் பால்பண்ணை அருகில் வெங்காய மண்டியின் உள்ளே உள் அரங்கில் நேற்று காலை 11மணி அளவில் திருச்சி, ஆயில் மில், மற்றும் மலைக்கோவில், டி. நகர், திருவெறும்பூர், நவல்பட் ரோடு. ஆகிய பகுதிகளின் புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் சிறப்பாக நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரமைப்பின் திருச்சி மண்டல தலைவர் தமிழ் செல்வம் வரவேற்று பேசினார். மாநில பொது செயலாளர் கோவிந்தராஜூலு முன்னிலையில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர். இவ்விழாவில் மாநில நிர்வாகிகள் கந்தன், ரங்கநாதன், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், செயலாளர் செந்தில் பாலு,பொருளாளர் தங்கராஜ், துணை தலைவர்கள், ஆர். பி. பாண்டியன், காசி விஸ்வநாதன், இளைஞர் அணி ஹக்கீம்,மார்க்கெட் கமலக்கண்ணன், சேகர்,முருகானந்தம், மலைக்கோவில் கார்த்திக், மருதமுத்து, மற்றும் பேரமைப்பின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி செய்தியாளர் ஜெ. வி. ஆனந்த்