தண்டையார்பேட்டையில் போதை மாத்திரைகள் விற்ற நபர் கைது -இருபது லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்:

0
501

போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை கண்டுபிடித்து தடுக்கும் பொருட்டு சென்னை மாநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பெயரில் சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை மண்டல இணை ஆணையாளர் ரம்யபாரதி மற்றும் துணை ஆணையாளர் சுந்தரவனம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டை காவல் சரகம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதை பவுடர் மற்றும் மெத்ஐஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்தனர்

அதன் தொடர்ச்சியாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் பொறுப்பு சுந்தரவதனம் தலைமையில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறியும் பணி முடுக்கி விடப்பட்டது

இந்நிலையில் தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஜீவந்தன் (வயது25) என்பவர் போதை மாத்திரைகள் வாட்ஸ்அப் குரூப் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜீவந்தனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்

அப்பொழுது சென்னை ECR கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள விடுதிகளுக்கு பார்ட்டி விருந்துகளுக்காக இருபது லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் விற்பனை செய்ய வைத்திருந்ததை கண்டறிந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்

பட்டதாரி இளைஞரான ஜீவந்தன் கொரோனா நோய்தொற்று காலத்தின் பொழுது சரியான வேலை இல்லாத காரணத்தினால் ஆன்லைன் மூலமாக போதை மாத்திரைகளை வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது

இதனைத் தொடர்ந்து காசிமேடு N2 காவல்துறையினர் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து ஜீவந்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here