சிறுமி 3 மாத கர்ப்பம் – வாலிபர் கைது;

0
358

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகள் வயது 16 குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து உள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்று வரும்போது குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அந்த மாணவி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார் இதனையடுத்து அவரது பெற்றோர்கள் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன்,குமரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக காணாமல்போன மாணவியை தேடி வந்தனர் இந்நிலையில் நேற்று காலையில் குடியாத்தம் பஸ் நிலையம் அருகே அந்த மாணவியை போலீசார் மீட்டனர் அந்த மாணவியை குடியாத்தம் கிராமிய காவல் நிலையம் கொண்டு வந்து மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தினர் அப்போது அந்த மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் பரிசோதனையில் மாணவி கூறியது உறுதி செய்யப்பட்டது மேலும் அந்த மாணவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார் விசாரணையில் குடியாத்தம் செருவங்கி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணிய மகன் விக்னேஷ் வயது 20 ஏசி மெக்கானிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது அப்போது அந்த மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தற்போது மூன்று மாத கர்ப்பம் என தெரியவந்தது இதனை தொடர்ந்து போலீசார் மாணவி காணவில்லை வழக்கை போக்சோ

வழக்காக மாற்றம் செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபர் விக்னேஷ் கைது செய்து வேலூர் மகிலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.நீதிபதி உத்தரவின் பேரில் வேலூர் சிறையில் அடைத்தனர். போலீசார் அந்த மாணவியை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here