சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 18 ஆம் தேதி முதல் காணவில்லை எனவும், கொருக்குப்பேட்டை ஐஓசி பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கடத்தி சென்றுவிட்டதாகவும் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் சிறுமி காணாமல் போனது தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன சிறுமி கொருக்குப்பேட்டை பகுதியில் இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் கொருக்குப்பேட்டை பகுதிக்கு சென்று சிறுமியையும், அவருடன் இருந்த வாலிபரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், பிடிபட்ட வாலிபர் கொருக்குப்பேட்டை ஐஓசி பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பதும், எம் சி ரோட்டில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்ததும், கடந்த சில மாதங்களாக சிறுமியை காதலித்து வந்து, திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று கோவிலில் வைத்து தாலி கட்டி அவரை பலமுறை கற்பழித்ததும் தெரியவந்தது. உடனடியாக இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்












