ஈ பாஸ் ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை செய்து சூழ்நிலைக்கு ஏற்ப உரிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் சூழ்நிலையை உருவாக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கொரோனா தடுப்பு பணி குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார்
இந்த வருடம் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது தென்மேற்கு பருவமழை சராசரியை விட இந்த ஆண்டு 28 சதவீதம் அதிகரித்துள்ளது
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர் தேக்க அணைகளின் கொள்ளளவு அதிகரித்துள்ளது
கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு இதர நோய்கள் இருப்பதால்தான் உயிரிழப்பு அதிகம் வருகிறது என்று ஆய்வில் தெரிகிறது
தன்னார்வலர்கள் மூலம் பொது இடங்களில் மக்கள் முகாகவசம் சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்றவற்றை வலியுறுத்து பிரச்சாரம் வாகனம் மூலம் விழிப்புணர்வு செய்து வருகிறோம்
மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் சூழ்நிலையை உருவாக்கம் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்
ஈ பாஸ் ரத்து செய்வது குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் இன்று ஆலோசனை செய்து சூழ்நிலைக்கு ஏற்ப உரிய அறிவிப்பை வெளியிடுவார்
எல்லா மாவட்டத்தின் வளர்ச்சியும் முக்கியம் அந்தந்த மாவட்டத்தோடு வளர்ச்சிக்காக அமைச்சர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் அந்த அடிப்படையில் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அமைச்சர்கள் கோரிக்கை முன்வைப்பது அவர்களின் உரிமை
மக்களின் வளர்ச்சிக்காக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளோம் மக்களின் எண்ணங்களை கோரிக்கையாக முன்வைக்கின்றோம். என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்














