சென்னை வியசார்பாடி உதயசூரியன் நகரில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜி. வயது 45. ரிக்சா ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் உதயசூரியன் குடியிருப்பு 6வது பிளாக் அருகே ராஜீ தனது குடும்பத்துடன் நின்று பேசி கொண்டிருந்தார். அப்பொழுது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராஜீயை மறைத்து வைத்திருந்த கத்தியால் சராமாரியாக வெட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார் அதனை தடுக்க முயன்ற பொழுது அவர்களையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது. இதில் ராஜீ சம்பவ இடத்திலே பலியானார். மேலும் அதனை தடுக்க சென்ற அவரது மனைவி வசந்தி உறவினர்களான சாந்தி, அருணாச்சலம், சுந்தரி, சுரேஷ், தண்டாபாணி ஆகியோர் வெட்டப்பட்டனர். காயமடைந்த அனைவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.















