சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை;

0
322

ஓமலூர் காடையாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ராஜதுரை (வயது 28). தொழிலாளி. இவர் 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பழகியுள்ளார்.

பின்னர் கடந்த 1.12.2018 அன்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ராஜதுரைக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here