திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தளி காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை கண்டுபிடித்து கைது செய்யும்படி உடுமலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ் மொழிவேல் அவர்கள் உத்தரவிட்டார் அந்த உத்தரவின்படி தளி காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவராஜ் மற்றும் காவலர் அவர்களும் பொன்னால் அம்மன் சோலையில் மாரிமுத்து வயது 50 அவருடைய தோட்டத்தில்கள்ளச்சாராயம் காய்த்து வடிகட்டிக் கொண்டிருந்தார் அப்பொழுது தளி போலீஸ் நிலையம் காவலர்கள் ரோந்து பணி சென்றபொழுது கள்ள சாராயம் காய்த்துக் கொண்டிருந்த மாரிமுத்து என்பவரையும் அவருடன் பிரபாகரன் என்பவரும் பிடிபட்டனர் உடனேதளி காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்தார்கள் இதனைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையை வெகுவாக பாராட்டினர்
















