சென்னை வண்ணாரப்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட திருவொற்றியூர் புதுவண்ணாரப்பேட்டை ராயபுரம் காசிமேடு கொருக்குப்பேட்டை ஆர்கேநகர் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டுமுதல் இந்த ஆண்டு வரை தொலைந்து போன செல்போன்களை IMEI நம்பர்களை கொண்டு கண்டுபிடித்து போலீஸார் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்
சென்னையில் அனைத்து துணை ஆணையர் அலுவலகத்தில் அந்தந்த பகுதிகளில் காணாமல்போன செல்போன்களை கண்டுபிடித்து அதன் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
வண்ணாரப்பேட்டை சரக காவல் துணை ஆணையர் திரு.சுப்புலட்சுமி அவர்கள் 292 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்
கடந்த ஆண்டு கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் பறித்துச் சென்ற காணாமல் போன 1262 செல்போன்களின் IMEI மூலம் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன
அதனடிப்படையில் இன்று முதல் கட்டமாக 692 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் போலிசார் ஒப்படைத்தனர்
















