ராமேஸ்வரம் அருகே உள்ள மாரியம்மன் கோவில் அருகே சேராங்கோட்டை மற்றும் தெற்கு கீரையூர் பகுதி உள்ளது.
இரு வெவ்வேறு பிரிவினரை சேர்த்தவர்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
அப்பொழுது ஒரு பிரிவை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் நண்டு வலைக்கு பயன்படுத்தப்படும் கத்தியை எடுத்து மற்ற ஒரு தரப்பை சேர்ந்த குமார், சேது, சூரியன், ஹரிபிரபாகரன், சூரியபிரகாஷ் ஆகியோரை குத்திவிட்டு தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்துலயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார், கத்திகுத்தில் காயம் அடைந்த சேது, சூரியன், சூரியபிரகாஷ், ஹரிபிரபாகரன் ஆகியோர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்ககிடையே கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்விரோதத்தில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















