ஆந்திராவிலிருந்து வெளி மாநிலத்துக்கு கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஆந்திரா பகுதிகளில் இருந்து தமிழகம் வழியாக இரவு நேரங்களிலும் விடியற்காலையிலும் லாரிகளில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை தண்டையார்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே புதுவண்ணாரப்பேட்டை போலீசார் ஆய்வாளர் சிதம்பர பாரதி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது போலீசாரை கண்டவுடன் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு ஈச்சர் வண்டியை மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ஒன்றரை டன் எடையுள்ள 46 செம்மர கட்டைகளை அடுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க மேலே தார்ப்பாய் வைத்திருப்பதும் அதன் கீழே கட்டைகளை வைத்து மறைத்து இருப்பதும் தெரியவந்தது உடனடியாக ஓட்டுனரை கைது செய்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் வனத்துறை அதிகாரிகள் ஓட்டுநர் வெங்கடேசன் என்பவரை கைது செய்து வாகனம் மற்றும் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் ஆந்திராவிலிருந்து லாரி வழியாக செம்மரக்கட்டைகள் கொண்டுவரப்பட்டு துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ல உள்ளதாக தெரியவந்துள்ளது














