சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வேளாண் மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன இதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக சார்பில் வேளாண் மசோதா சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் சட்டமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி சுபா வீரபாண்டியன் சேகர்பாபு கட்சி நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.












