புது வண்ணாரப்பேட்டையில் பாழடைந்த அரசு அச்சக குடியிருப்பு கட்டிடத்தில் போதை ஊசி மற்றும் மாத்திரைகள் பயன்படுத்திய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.வாட்சப் மூலம் போதை பொருள் வாங்கியதும் அம்பலமானது.சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் உத்தரவின் பேரில் சென்னை முழுவதும் போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக புது வண்ணாரப்பேட்டை பர்மா நகர் அருகே உள்ள பாழடைந்த அரசு அச்சக குடியிருப்பு கட்டிடத்தில் அடையாளம் தெரியாத சிலர் அப்பகுதிக்கு வந்து செல்வதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சந்தேகம் பட்டு குடியிருப்பின் உள்ளே சென்று பார்த்த போது போதை ஊசி செலுத்திக் கொள்வதாகவும் மர்மமான நடவடிக்கைகள் ஈடுபடுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர் இதனை அடுத்து புது வண்ணாரப்பேட்டை போலீஸ் ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.அங்கு பிசி என்ற மணிகண்டன்(22) மற்றும் ஆனந்த்(22) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தபோது போதை மாத்திரைகள் நிட்ராவெட், டைடொல் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் பயன்படுத்தப்படாத ஊசிகள் இருந்தன இந்த இருவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் அவர்களுடைய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆர் கே நகரில் நேதாஜி நகர் பட்டேல் நகர் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து வந்த நேதாஜி நகர் 2வது தெருவை சேர்ந்த முகமது ஆசிக், மற்றும் ஜாவித் ஷரீஃப் ஆகியோரை சோதனை செய்கின்றபோது அவர்களிடமும் போதை மாத்திரைகள் மற்றும் ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன இவர்கள் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் வாகனமான ஆக்டிவ் ஹோண்டா இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் வாட்சப் குழு அமைத்து போதை பொருள் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளார் அவரை ஆய்வாளர் தலைமையில் போலீசார் தேடி வருகின்றனர்.