என்னுடைய சொத்து மதிப்பு குறித்த விவரத்தை என்னுடைய தேர்தல் மனுதாக்கலிலேயே தெரிவித்துவிட்டேன். ஆனால் அவர்கள் தவறான முறையில் சொத்துக்களை ஈட்டியுள்ளார்கள் என்பதை விசாரிக்கக்கோரி ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம். பொங்கல் பரிசை அரசு அலுவலர்கள் மூலம் தான் கொடுக்க வேண்டும். ஆனால் அதிமுககாரர்கள் டோக்கன் போட்டு, அமைச்சர் படம் போட்டு கொடுக்க இது என்ன அவர்கள் அப்பன்வீட்டு சொத்தா?” என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.











