காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து தமிழக அரசு சார்பில் செயற்கை பவளப்பாறைகள் போடப்பட்டது;

0
499

மீன்வளத்தை பெருக்கும் வகையில் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 2 நாடிகல் மைல் தொலைவில் தமிழக அரசு சார்பில் செயற்கை பவளப்பாறைகள் போடப்பட்டன.

18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 பவளப்பாறைகள் அமைக்கும் திட்டத்தால், 35 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் பயனடைவார்கள் என்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இந்தியாவிலேயே மீன் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறிய ஜெயக்குமார், குஜராத்தை பின்னுக்குத் தள்ளி, 7 லட்சத்து 75 ஆயிரம் டன் மீன் தமிழகத்தில் பிடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அண்மைக் கடல் மீன்பிடித்தலை பலப்படுத்தவும், நாட்டுப்படகு மீன்பிடிப்பை ஊக்கப்படுத்தவும் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படுவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். பாறை, காலா, கொடுவா போன்ற மீன் உற்பத்தி இதனால் அதிகரிக்கும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்,

திமுகவில் குடும்ப ராஜ்யம் நடப்பதால் தான் அந்த அதிருப்தியில் அதில் இருக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவராய் வெளியேறி கு.கா.செல்வம் போல மற்றொரு கட்சியில் இணைகிறார்கள், இன்னும் வரும் தேர்தலுக்கு முன்பே அனேகம் பேர் வெளியேற வாய்ப்புள்ளது,

அதிமுக கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்குமாறு, எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், அதிமுக கொடியை காட்டி எம்.எல்.ஏ. ஆன எஸ்.வி.சேகர், எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் வாங்கிய 5 ஆண்டு சம்பளத்தை திருப்பித்தர வேண்டும் என்று கூறினார்.
எம்.எல்.ஏ. பென்சன் வேண்டாம் என்று எஸ்.வி.சேகர் எழுதித்தந்துவிட்டு பேசட்டும் என்று வேண்டும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here