சென்னை திருவெற்றியூர காலடிப்பேட்டை எழுத்துக்காரன் தெருவை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் AC மெக்கானிக் வேலை செய்து வருகிறார் இவர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் , பழுதான ஏசியைச் சரிசெய்ய சென்ற முயன்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கே சிகிச்சை அளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டார். பின்னர், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் விக்னேஷ் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.














