திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 17 பள்ளிகளில் 40 வகுப்பறைகளுக்கு “ஸ்மார்ட் கிளாஸ்” திட்டம்;

0
226

வடசென்னை தொகுதியில் முதன் முறையாக அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜப்பான் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்திடவும், மாணவச்செல்வங்கள் எளிதில் கல்வி பயிலும் வகையிலும் இதுவரை 22 பள்ளிகளில், 39 வகுப்பறைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி. திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 17 பள்ளிகளில் 40 வகுப்பறைகளுக்கு “ஸ்மார்ட் கிளாஸ்” திட்டத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.பி.சங்கர், மண்டலக் குழுத் தலைவரும், கிழக்குப் பகுதிக் கழகச் செயலாளருமான திரு. தி.மு.தனியரசு எம்.சி., ஆகியோர் முன்னிலையில் மாணவர்கள் பயன்பாட்டிற்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி MP அர்ப்பணித்தார்.

இந்நிகழ்வில்,திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் வை.ம.அருள்தாசன், வட்டக் கழகச் செயலாளர்கள் திரு.குறுத்து முனுசாமி,எஸ்.தமிழ்ச்செல்வன், மண்டல அலுவலர் மற்றும் கழக நிர்வாகிகள் குறிஞ்சி எஸ் கணேசன்,வழக்கறிஞர் சந்திரபோஸ், ஆர்சி ஆசைத்தம்பி எம்.வி.குமார்  இரா. குமரேசன்,பி.எஸ்.சைலஸ்,ஒய். நந்திவர்மன் முருகா எஸ்.ஆறுமுகம்,இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.டி.மதன்குமார்,பா.பாலஉமாபதி உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here